குமார புரம் படுகொலை நினைவேந்தல்

வ.ராஜ்குமாா்

திருகோணமலையில் 1996.02.11ம்திகதிநடந்த மோசமான படுகொலையின்  23 வது ஆண்டு நினைவு நாள் நேற்று மாலை 5.30.மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது.இந்நிகழ்வில் சம்பவத்தில் தமது உறவுகளை இழந்த உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலிகளைச்செய்தனர். அவர்களது நினைவாக மரங்களும் நடப்பட்டன. ஆரம்பத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் மலரஞ்சலிகள் இடம்பெற்று பின்னர் நிகழ்வுகள் இடம்பெற்றன்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிளிவெட்டி குமாரபுரம் கிராமத்தில்; படையினரால் நிகழ்த்தப்பட்டதாக முறையிடப்பட்ட இப்படுகொலையில் சிறுவர்கள் அடங்கலாக 26 பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களில் ஒரு மாணவி கற்பழிக்கப்பட்டு பின்னர் கொருரமாக கொலைசெய்யப்பட்டிருந்தார்

. இந்நிலையில் 23 ஆண்டுகளித்த நிலையிலும் நீதி கிடைக்காத நிலையில் நேற்று மாலை மக்கள் அதற்காக அமைககப்பட்ட நினைவிடத்தில்  தமது அஞ்சலியைச்செய்தனர்.அதிகளவிலான உறவினர்கள் கலந்துகொண்டு கண்ணீர்மல் தமது அஞ்சலியைச்செய்தனர் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் மற்றும் தொண்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செய்தனர்.இங்கு எடுக்கப்பட்ட படங்களை இங்கு காண்க

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்