இலவச மருத்துவ முகாம்

வ.ராஜ்குமாா்
RUN to Beat Cancer in Srilanka organization UK  மற்றும் CANE அமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் பங்களிப்புடன்; வறிய மக்களின் நலனுக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் 16.02.2019 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் இடம்பெறவுள்ளது.
இதில் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை, கண் பரிசோதனை, பற்சிகிச்சை, தோல் நோய் சிகிச்சை, பொதுவான சிகிச்சை, குருதி அழுத்தப் பரிசோதனை, நீரிழிவுப் பரிசோதனை போன்ற பல மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் சமூக சேவைகள் திணைக்களத்தினால் திருகோணமலையில் இருந்து வெருகல் வரை இலவச பஸ் போக்குவரத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதோடு அத்திணைக்களத்தின் நடமாடும் சேவைப் பிரிவும் மருத்துவ முகாம் இடம்பெறும் பகுதியில் இயங்கவுள்ளது.
மேலும் வருகின்ற மக்களுக்கான உணவு, சிற்றுன்டி, குளிர்பாணம் என்பனவும் இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையினால் சுகாதார தேவை உடைய மக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்