பொதுமக்களுக்கு எச்சரிக்கை: யாழில் நள்ளிரவு நடந்த அனர்த்தம்!

அதியுயர் வெளிச்சம்கொண்ட மின்குமிழ் ஒன்று வெடித்ததனால் சிலரின் கண் பாதிப்புக்குள்ளாகிய சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலியிலுள்ள செட்டியார்மடம் என்ற கிராமத்தில் நேற்று முந்தினம் நிகழ்ந்துள்ளது.

வீடு குடிபுகும் நிகழ்வொன்றின் முதல் நாள் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் புதிதாக வீடு கட்டிய குடும்பம் ஒன்று வீடு குடிபுகும் நிகழ்வுக்கான முதல் நாள் ஏற்பாடுகளில் இரவுவேளை ஈடுபட்டிருந்தது.

இரவு வெளிச்சத்துக்காக அதியுயர் வெளிச்சம்கொண்ட மின்குமிழ் பொருத்தப்பட்டு இருந்துள்ளது. மின்குமிழுக்கு அருகில் இருந்து வேலை செய்துகொண்டிருந்தபோது குறித்த மின்குமிழ் திடீரென்று வெடித்துச் சிதறியுள்ளது.

இதனால் அதிலிருந்து வெளிப்பட்ட புகை குறித்த சிடத்தில் சிறிது நேரம் பரவியிருந்ததனால் அவ்விடத்தில் நின்ற அனைவருக்கும் மறுநாள் காலையில் கண்கள் இரண்டும் சிவந்து வீங்கியுள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்படவர்கள் நேற்றைய தினம் வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான அதி சக்திவாய்ந்த வெளிச்சமுடைய மின்குமிழ்களைக் கையாளும்போது அதன் அருகில் நிற்பதை தவிர்க்கவேண்டும் என பொதுமக்களுக்கு மின் பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்