சமிந்த விஜேசிறி நீதிமன்றில் முன்னிலை

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரே இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்