சி.வி. தலைமையில் விசேட குழுவொன்று ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் – அனந்தி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தலைமையில் விசேட குழு ஒன்று பங்குகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமது வழிகாட்டலின் கீழ் இயங்கும் குழு ஒன்றை உருவாக்கி ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

அவர்கள் தாயக தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும், தமிழக தமிழர்களுடன் இணைந்து, ஐ.நா.வில் செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்