இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் ஐ.நா.வை மதிக்கின்றோம் – அமெரிக்க தூதுவர்

இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவை தாம் மதிப்பதாக அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை வந்துள்ளனர்.

இந்தக் குழுவினர் கொழும்பில்  நேற்று (செவ்வாய்க்கிழமை)  அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறித்த டுவிட்டர் பதிவிலேயே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில் ‘ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினேன்.

இலங்கையில் மேலும் நல்லிணக்கம், மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்காக அரசாங்கத்துடனும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுடனும் இணைந்து பணியாற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவை நாங்கள் மதிக்கின்றோம்’ என பதிவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்