உறவுக்காக போராடிய தாய் மாரடைப்பால் உயிரிழந்தார்!

காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளையைத் தேடியலைந்த  தாய் ஒருவர் மாரடைப்பால் காலமாகியுள்ளார்.

மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச் சேர்ந்த வேலு சரஸ்வதி என்பவரே இவ்வாறு நேற்று (செவ்வாய்க்கிழமை) காலமாகியுள்ளார்.

இவர், விடுதலைப்புலிகளின்  அமைப்பிலிருந்து உயிரிழந்த, சுப்பிரமணியம் கோணேஸ்வரன், லெப்.கேணல் கணபதி, கதிர்காமர் ஆகிய மூவரின் தாயார் ஆவார்.

கடற்புலி போராளியான சுவித்தா எனும் அவரது மகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு, பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

காணாமலாக்கப்பட்ட தனது மகளைத்தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர், தற்பொழுது மரணத்தை தழுவியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்திற்கு முன்னரும் யுத்தத்தின்போதும் அதற்கு பிற்பட்ட பாலப்பகுதியிலும் இராணுவத்தினரால் பலர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி, தமிழர் தாயகப் பகுதிகளெங்கும் அவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் மூலம் எந்தவித தீர்வையும் பெறாது, தமது வாழ்நாளையே பலர் போராட்டத்திலேயே முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்