வருமானம் குறைந்த சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் காரைதீவு பிரதேச செயலகத்தில் வழங்கிவைப்பு…

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் 2018ம் ஆண்டுக்கான வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காரைதீவு 12 ஆம் பிரிவில் வசிக்கின்ற தெரிவுசெய்யப்பட்ட வருமானம் குறைந்த சிறுகைத்தொழில் முயற்சியாளர்களின் தொழிலை விருத்தி செய்யும் நோக்குடன் வாழ்வாதார உதவிப் பொருட்கள் இன்று காரைதீவு பிரதேச செயலாளர் திரு வேதநாயகம் ஜெகதீசன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது பிரதேச செயலக நிதி உதவியாளர் திரு.P. மோகன் அவர்களும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.R. புஸ்பகாந்த் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஐந்து பயனாளிகளுக்கு ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 50,000.00 ரூபாய் வீதம் 250,000.00 ரூபா பெருமதியான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்