கரடிப்போக்கில் ஏ-9 வீதியில் இ.போ.ச. பஸ் கிளிநொச்சி கச்சேரி வாகனம் விபத்து!

கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்திக்கு அண்மையாக ஏ-9 வீதியில் இ.போ.ச. பஸ் வண்டியும் கிளிநொச்சி மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் பயணித்த சிறியரக வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஏ-9 வீதியால் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை கோக்கு வரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்திக்கு அண்மையாகவுள்ள பஸ் தரிப்பிடத்தில் நின்ற பயணிகளை ஏற்றிவிட்டு வீதியின் நடுப் பகுதி நோக்கிச் சென்ற வேளை கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கி அதே திசையில் பயணித்த கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களை ஏற்றிச் செல்லும் சிறிய ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (13.02.2019) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தால் கிளிநொச்சி மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் பயணிக்கும் வாகனம் கடுமையாகச் சேதமடைந்ததுடன் அதில் பயணித்தவர்கள் காயங்கள் ஏதுமின்றித் தப்பித்துக்கொண்டார்கள்.

இவ்விபத்துத் தொடர்பில் களிநொச்சிப் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் விரைந்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

கிளிநொசியில் ஏ-9 வீதியால் இ.போ.சபைக்குரிய பேருந்துகளும் தனியார் போக்குவரத்துச் சேவைக்குரிய பேருந்துகளும் மிக வேகமாக ஒன்றையொன்று துரத்துப்பட்டுச் செல்வதாகவும் இதனால் பாரிய விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது எனவும். இதனை உரியவர்கள் கவனம் செலுத்திக் கட்டுப்படுத்தத் தவறும் பட்சத்தில் பாரிய விபத்துக்கள் இன்னுமின்னும் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாகப் பலரும் கூறிக் கலை தெரிவிக்கின்றார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்