ஜனாதிபதி வேட்பாளர் யார்? மகிந்த அணிக்குள் வெடித்தது மோதல்!

இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் மகிந்த அணிக்குள் மோதல் வெடித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் பசில் ராஜபக்ச வெளியிட்ட கருத்து, மகிந்த ஆதரவு தரப்பினர் மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் ஒருவரே அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்றும், வேறு கட்சியைச் சேர்ந்த வேட்பாளரை ஆதரிக்குமாறு கேட்கமாட்டோம் என்றும் பசில் ராஜபக்ச கம்பகாவில் நடந்த கூட்டத்தில் கூறியிருந்தார்.

பசில் ராஜபக்சவின் இந்தக் கருத்து தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கருத்து வெளியிடுகையில், அதிபர் வேட்பாளர் விடயத்தில் பசில் ராஜபக்ச தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

அத்துடன், பொதுஜன முன்னணி ஒரு தனித்த கட்சி அல்ல என்றும் அதில் பல்வேறு கட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ள வாசுதேவ நாணயக்கார, அதிபர் வேட்பாளர் தொடர்பாக பசில் ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து மகிந்த ராஜபக்சவுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்