ஆசியக் கிண்ணத்தை வென்ற தேசிய வலைப்பந்து அணியினர் 12 பேருக்கும் வீடு அன்பளிப்பு..!

தேசிய மற்றும் சர்வதேச மட்டப் போட்டிகளில் வலைப் பந்து விளையாட்டில் கிண்ணங்களை வென்ற தேசிய வலைப்பந்து அணியினர் 12 பேருக்கும் தலா 3 மில்லியன் பெறுமதியுள்ள வீட்டினை வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார்.

2018 ஆம் ஆண்டு ஆசிய வலைப் பந்து விளையாட்டில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஆசியாக் கிண்ணத்தை இவ்வணி கைப்பற்றியது. அத்துடன் அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட போர் கலை விற்பன்னர் திரு. ஆரச்சிகே நொசெல் அஜந்த பெரேராவுக்கும் போர் விளையாட்டில் சர்வதேச ரீதியில் வெற்றியடைந்ததற்காகவும் இவருக்கும் வீடு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அத்துடன் எதிர்வரும் மே மாதம் சம்பியாவில் நடைபெறவுள்ள வலைப்பந்து விளையாட்டில் பங்குபற்றவுள்ள 18 பேருக்கும் அதாவது இலங்கை வலைப்பந்தாட்ட அணியினருக்குரிய விமான பயணச் சீட்டுக்கான செலவான 42 இலட்சம் ரூபாயை தனது தனிப்பட்ட நன்கொடையாளிகளின் மூலம் பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளார்கள்.

மென்மேலும் இந்த வீராங்கனைகள் வலைப்பந்தாட்டத்தில் வெற்றியடைவதற்கு இவர்கள் ஒவ்வொருவருக்கும் மொரட்டுவை, அங்குலானையில் ‘சயுருபுர’ வீடமைப்புத் திட்டத்தில் டீஃ6ஃ7 சுமார் 3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீட்டினை அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சரின் மனைவி ஜலனி பிரேமதாச, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேர்னாட் வசந்த மற்றும் நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் சாந்த கஹவல அவர்களும் மேலும் பலரும் கலந்து கொண்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்