கிளி.வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக்குளமா? – அறிக்கை கையளிப்பு

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அனர்த்தம் இரணைமடுக் குளத்தினால் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய வட.மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நியமித்த குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதனினால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.

இதன்காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்ததுடன், பல குடும்பங்களைச் சேரந்த மக்கள் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட இரணைமடுக் குளமே காரணமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இந்த விடயம் தொடர்பாக ஆராய, வடக்கு கிழக்கு மாகாண அமைச்சு ஒன்றின் செயலாளராக இருந்து ஓய்வுப்பெற்ற பொறியியலாளர் இரகுநாதன், நியாப் திட்டத்தில் பணியாற்றிய இந்திரசேன, மற்றும் ஆளுநரின் சிபாரிசுக்கு அமைய மொரட்டுவ பல்கலைகழக பொறியியலாளர் ஒருவருமாக மூவர் கொண்ட குழுவை ஆளுநர் சுரேன் ராகவன்  நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்