வணிகச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக பிரதமர் வடக்கிற்கு விஜயம்!

வடக்கின் வணிகச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அதன்படி இன்று (வியாழக்கிழமை) அவர் வடக்கிற்கு பயணமாகின்றார்.

இந்த விஜயத்தின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம், பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்காக, நிலங்களை சுவீகரிக்கவும், உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதற்கான திட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.

அதன்படி வடக்கின் வணிகச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, அமைச்சரவை; அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்