காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கு அமைச்சரவை அனுமதி – காணிகளும் சுவீகரிப்பு

வடக்கின் வணிகச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில்,  காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்காக, நிலங்களை சுவீகரிக்கவும், உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான திட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். இந்த திட்டத்துக்கு அமைச்சரவை நேற்று முன்தினம் அங்கீகாரம் அளித்துள்ளது.

அதேவேளை, இன்று தொடக்கம் மூன்று நாட்கள் வடக்கில் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம், பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்