போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் சப்போ குற்றவாளியாக நிரூபணம்

நியூயோர்க் மாநில நீதிமன்றத்தில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் விசாரணைகளில், மெக்ஸிக்கோவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னர் எனக் கூறப்படும் ஜோக்குயின் எல் சப்போ கஸ்மன் (Joaquín El Chapo Guzmán) குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

61 வயதான எல் சப்போ மீது சுமத்தப்பட்ட 10 குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளி என நிரூபணமாகியுள்ளது.

கொக்கெய்ன் மற்றும் ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபடுகின்றமை, சட்டவிரோத ஆயுதங்களைத் தம்வசம் வைத்திருந்தமை, மற்றும் பணச்சலவையில் ஈடுபடுகின்றமை உள்ளிட்ட ஏராளமாக குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

குறித்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளபோதிலும், அவருக்கான தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், அவருக்கு ஆயுட்தண்டனை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே காணப்படுவதாகவும் அவை குறிப்பிட்டுள்ளன.

மெக்ஸிக்கோ சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச்சென்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஜோக்குயின் எல் சப்போ கஸ்மன் 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்பின்னர், பலம்வாய்ந்த போதைப்பொருள் கடத்தல் குழுவுக்குத் தலைமை வகித்த குற்றச்சாட்டின் மீதான விசாரணைகளுக்காக 2017 ஆம் ஆண்டு அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்