வெறும் நான்கு நாட்களில் தோன்றி திடீரென்று மறையும் விநோத உயிரினம்! கடவுளா பிராணியா?

உலகில் மிக விநோதமான உயிரினங்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டுவந்தாலும் அவை குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன.

இன்னமும் கண்டுபிடிக்கப்படாத லட்சோபலட்சம் உயிரினங்கள் காடுகள், மலைகள், மற்றும் நீர் நிலைகளில் மறைந்து வாழ்வதாக சமீபத்திய ஆய்வுகள்மூலம் விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஒரு மாவட்டத்தில் மிகவும் விநோதமான தவளை இனத்தைச் சார்ந்த உயிரினம் ஒன்று குறித்து இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த உயிரினம் ஒவ்வோர் ஆண்டும் கேரளாவின் வயனாட் (Wayanad) மாவட்டத்தில் தோன்றி மறைவதாக டெல்லி பல்கலைக்கழக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வயனாட் மாவட்டத்தின் மக்களிடமிருந்து பெறப்பட்ட தகவலுக்கு அமைவாக ஒவ்வோர் ஆண்டும் இந்த விநோத உயிரினம் சாலை ஓரங்களிலும் வயல் வரம்புகளிலும் காணப்படுவதாகவும் வெறும் நான்கு நாட்களில் அங்கு இருந்துவிட்டு மீண்டும் திடீரென்று மறைந்துவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நான்கு நாட்களின் பின்னர் அந்த உயிரினம் மக்கள் எவரின் கண்களுக்கும் தெரிவதிலை என கூறப்பட்டுள்ளது.

எங்கே செல்கிறது?

மிகவும் குறுகிய தோற்றத்தினைக்கொண்ட (3 செண்டி மீற்றர்) இந்த உயிரினம் திடீரென்று மறைந்து எங்கே செல்கின்றது என்பது தொடர்பில் புதிராகவே உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆராய்ச்சி முடிவுகளின்படி குறித்த உயிரினம் உலகில் கண்டறியப்பட்ட புதிய இனமாக இருக்கலாம் என நம்பப்படுவதுடன் நன்கு வளர்ந்த அந்த உயிரினத்தின் முதுகுப் பகுதியில் கண் போன்ற அமைப்பில் இரண்டு கறுப்புப் புள்ளிகள் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை நான்கு நாட்களில் திடீரென்று காணாமல் போகும் இந்த உயிரினம் நாற்பது மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என கருதப்படுவதுடன் வீதிகளின் பாலங்களுக்கிடையில் மறைந்து வாழ்க்கை நடத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்