அகில தனஞ்சயவின் தடை நீக்கம்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு முறைமை சரியானது என சர்வதேச கிரிக்கட் பேரவையினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்துடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் நடுவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்வதேச கிரிக்கட் பேரவையினால், அகில தனஞ்சயவுக்கு சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதேநேரம், அவரின் பந்துவீச்சு முறைமை சரியான என்பதை உறுதிப்படுத்துவதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.

இதற்காக அகில தனஞ்சய, சென்னையில் உள்ள ஸ்ரீ ராமசந்ர விளையாட்டு ஆய்வு மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், அகில தனஞ்சயவின் பந்துவீச்சு முறைமை சரியானது என சர்வதேச கிரிக்கட் பேரவையினால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளமையினால், தென்னாபிரிக்காவுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி குழாமில் அவர் இணைக்கப்பட்டுள்ளார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தேச அணியின் தலைமைத்துவம் லசித் மாலிங்கவுக்கு கிடைத்துள்ளதுடன், நிரோஷ் திக்வெல்ல உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்