ஜனாதிபதி செயலக சாரதியின் மோசமான செயற்பாட்டினால் சிக்கலில் மைத்திரி!

ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் சாரதி மற்றும் இன்னுமொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளர்.

அரலங்வில ஏரிக்கு அருகில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அரலங்வில மற்றும் அரலங்வில பகுதிகளை சேர்ந்தவர்களாகும்.

அவர்களில் ஒருவர் கொழும்பு ஜனாதிபதி செயலக சாரதி எனவும் மற்றைய நபர் முச்சக்கர வண்டி சாரதியாக செயற்படுகின்றமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி செயலக சாரதி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருப்பது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்