வரலாற்றில் முதன்முறையாக இலங்கை மாணவர்களின் கண்டுபிடிப்பு! விண்ணில் பாயவுள்ள செயற்கைகோள்

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மாணவர்கள் தயாரித்த ராவணா என்ற செயற்கை கோளை ஜப்பான் உத்தியோகபூர்வமாக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிது ஜயரத்ன என்ற மாணவன் மற்றும் தாய்லாந்து பல்கலைக்கழத்தில் பொறியியல் பட்டம் பெற்ற துலானி சாமிகா என்ற மாணவியும் இணைந்து இந்த செயற்கைகோளை தயாரித்துள்ளனர்.

ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனத்தில் வைத்து இந்த செயற்கைகோள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளிற்கு ராவணா வன் என பெயரிடப்பட்டுள்ளது.

1000 சென்றி மீற்றர் வரை சிறியதாக காணப்படும் இந்த செயற்கைகோள் 1.1 கிலோகிராம் நிறையை கொண்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரவணா செயற்கைகோள் தொடர்பான தகவல்கள் உத்தியோகபூர்வமாக ஜப்பான் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த செயற்கைகோள் ஊடாக இலங்கைக்கு அருகில் உள்ள எல்லைகளை புகைப்படம் எடுக்க முடியும்.

செயற்கை கோள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி அமெரிக்காவில் இருந்து சர்வதேச விண்வெளி நிறுவனத்திற்கு அனுப்பப்படவுள்ளது.

பின்னர் பூமியில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரத்தில் வைத்து இந்த செயற்கைகோள் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.

இன்னும் 5 வருடங்களுக்கு இதனை செயற்படுத்த முடியும் எனவும் இது மணிக்கு 7.6 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை இலங்கையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதற்தடவையாக செய்மதியை, விண்வெளிக்கு அனுப்பவுள்ளனர் என அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ தெரிவித்துள்ளார்.

நெனொ தொழில்நுட்பத்தில் செயற்படும் செய்மதியை இலங்கையை சேர்ந்த மாணவனும் மாணவியும் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஜப்பானுடன் இணைந்து – ஆதர் சி கிளார்க் மத்திய நிலையத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் செய்மதியை விண்வெளிக்கு அனுப்ப தயராகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்