சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பு அறிக்கை கையளிப்பு

ஐந்தாம் கட்ட கடன் தொகையை வழங்குவது தொடர்பான, சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பு அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கை இன்று (புதன்கிழமை) கையளிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கடன் தவணை தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் நேற்று முன்தினம் மாலை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.

அத்தோடு சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரிகள், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகள் தொடர்பான முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளதோடு, குறித்த பணிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் நிதியம் உறுதியளித்துள்ளது.

இந்நிலையிலேயே கடன் தொகையை வழங்குவது தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பு அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்