இலங்கையில் அறிமுகமாகும் புதிய நடைமுறை! மட்டற்ற மகிழ்ச்சியில் பெண்கள்

இலங்கையில் ரயிலில் பயணம் செய்யும் பெண்ணிகளின் பாதுகாப்பு கருதி புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ரயில் பயணங்களின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக தனித்துவமான ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன் முதற்கட்ட நடவடிக்கை பெண்கள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 08ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வியாங்கொடை ரயில் நிலையத்தை மேற்பார்வை செய்வதற்காக நேரில் சென்றிருந்த அமைச்சர், அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

பெண்களுக்கென தனித்துவமான ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்யும் வேலைத் திட்டம் முதற்கட்டமாக பாரிய நகரங்களை நோக்கிச் செல்லும் ஐந்து ரயில்களில் குறிப்பாக வேலை நேரங்களில் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டியிருப்பதாக சுட்டிக்காட்டிய போக்குவரத்து அமைச்சர், ரயிலில் பயணிக்கும் பெண்கள் செளகரியமாக செல்ல வேண்டுமென்றும் கூறினார்.

மேலும் ரயில் நிலையங்களின் வசதிகளை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்