மட்டு மாவட்ட வாலிபர் மாநாடு மார்ச் முதல் வாரத்தில்!

மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி புதிய நிர்வாகத் தெரிவுக் கூட்டம் நேற்று 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நல்லையாவீதி இலங்கைத் தமிழரசுக் கட்சி மாவட்ட பணிமனையில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டமையுடன் புதியநிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிப முன்னணி புதிய தலைவரா கமட்டக்களப்பு தொகுதியை சேர்ந்த லோ.திவாகரன் அவர்களும் செயலாளராக பட்டிருப்புதொகுதியை சேர்ந்த  க.சஜீந்திரன் அவர்களும் பொருளாளராக கல்குடா தொகுதியை சேர்ந்த மா.டிலக்‌ஷன் அவர்களும் உபதலைவராக  மட்டக்களப்பு து.மதன் அவர்களும் உபசெயலாளராக வாகரையை சேர்ந்தபா. முரளிதரன் அவர்களும்  தெரிவுசெய்யப்பட்டதுடன் கல்வி, சுகாதாரம்,
சமூகமேம்பாடு, அரசியல், முன்னாள் போராளிகள் தொடர்புகள் ,தொழில் நுட்பம், விளையாட்டு ,நலம்புரி, கலாசாரம், என பலதரப்பட்ட விடயங்களுக்கு தனித் தனியான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுக்கும் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
அதன் விபரம்:

# தலைவர்
லோ.தீபாகரன்
# செயலாளர்
க.சசீந்திரன்
# பொருளாளர்
ம.நிலக்சன்
# உபதலைவர்
து.மதன்
# உபசெயலாளர்
பாலசிங்கம்முரளிதரன்
# கல்வி
தே.மயூரன்
# விளையாட்டுதுறை
த.கிருஷ்ணகாந்
# சுகாதாரம்
தேவசிங்கம்திலக்சன்
# கலைகலாரம்
த.இன்பராசா
# நலன்புரி
த.விமலராஷ்
# சமூகசெயற்பாடு
இரா.சாணக்கியன்
# முன்னால்போராளிகள்தொடர்பானவிடயம்
எஸ்.ஜனார்த்தனன்
# மாற்றுத்திறனாளிகள்விடயதனம்
கே. சோபனன்
# பெண்கள்தலமைதாங்கும்குடும்பங்கள்.
அ.கிருரஜன்
# அனர்த்தமுகாமைத்துவம்
கி.சேயோன்
#அரசியல்
ந.துஷ்யனதன்
இந்த கூட்டத்தில் அரசியல் தொடர்பாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நடவடிக்கை தொடர்பாகவும் சமகால அரசியல் தொடர்பாகவும் இலங்கை தமிழரசு கட்சிபொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், பாராளுமன்றஉறுப்பினர்ஞா.ஶ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொ.செல்வராசா, பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்குமாகாணசபைஉறுப்பினர்மா.நடராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான் ஆகியோர் கருத்துரைகளையும் அறிவுரைகளையும் வழங்கினர்.
எதிர்வரும் மார்ச்முதலாம் வாரம் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் மாநாடு மட்டக்களப்பில் நடத்துவது எனஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் புதிய தலைவர் லோ.திவாகரன் அறிமுக உரையினை ஆற்றினார் அதனை தொடர்ந்து நிர்வாக உறுப்பினர்கள் தம்மை அறிமுகம்செய்து எதிர்கால வாலிபர் முன்னணி செயல்பாடுகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல வட்டாரங்களிலும் வாலிபர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கைஎ டுப்பதாக உறுதி கூறியதுடன் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் புதிய செயலாளர் க.சஜீந்திரனின் நன்றி உரையுடன் கூட்டம் முடிவுற்றது.
  

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்