கண்டுபிடிக்கப்பட்டது உலகின் மிகச்சிறிய கமரா…

உலகின் மிகச்சிறிய கமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 16 மெகா பிக்ஸெல் கமரா லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளதுடன் வீடியோ காட்சிகளை 4 கே 25 எப்.பி.எஸ்.வேகத்திலும் பதிவு செய்யும் முடியும் என இந்த கமராவை கண்டு பிடித்த நிறுவனமான மோகாகேம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிகவும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்ட இக் கமரா 270 டிகிரி கோணத்தில் சுழலும் தன்மை கொண்டது. அத்துடன் 4.5 சென்றி மீற்றர் நீளம்,அகலம் கொண்டுள்ளதோடு இதன் விலை சுமார் 14,129 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் உட்செல்லாத தன்மை கொண்டுள்ள இக் கமரா 60 மீற்றர் ஆழம் வரை சென்றாலும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறித்த கமராவில் 4 மணி நேரம் தொடர்ந்து காணொளி காட்சிகளை எடுக்க முடியம் என்பதும் விசேட அம்சமாக குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்