சூரியனால் இலங்கை முழுவதும் ஏற்படப்போகும் மாற்றம்!

இலங்கையில் சூரியனின் சக்தியைப் பயன்படுத்தி மின் பூங்காக்கள் அமைப்பதற்கான யோசனையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் முதற்கட்டமாக மொனராகலை உத்தேச சூரியசக்தி மின் உற்பத்தி பூங்காவின் மூலம் தேசிய மின்சார வலைப்பின்னலுடன் 40 மொகா வோட்ஸ் மின்சாரம் ஒன்றிணைக்கப்படவிருப்பதாக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ரவி கருநாயக்க தெரிவித்துள்ளார்.

மொனராகலை உத்தேச சூரியசக்தி மின் பூங்காவின் முதற்கட்ட பணிகளை அமைச்சர் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், நாட்டை முன்னேடுத்துச் செல்ல கடுமையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையின் ஏனைய பாகங்களிலும் சூரிய சக்தியில் அமைந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்