இலங்கை பால்மாக்களில் பன்றிக் கொழுப்பா? உறுதியானது தகவல்!

பால்மாக்களில் அடங்கியுள்ள சேர்மானங்கள் விஞ்ஞான ரீதியிலான நடவடிக்கைள் மூலம் தமது அமைச்சால் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர் மற்றும் நிபுணர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தரம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் இதுவரை முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு சோதனையிலும் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் எவ்வித பொருட்களும் இல்லையென நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சர் மற்றும் நிபுணர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் அங்கு மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

”இது அரசியல்ரீதியான பிரச்சினை அல்ல. நாட்டின் திரவப்பால் உற்பத்திபத்தி பத்து வீதமாகும். ஏனைய 90 வீதம் பால்மாவின்மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில் இலங்கையில் விற்பனை செய்யப்படும் பால்மாக்களில் விலங்கு எண்ணெய் அடங்கியிருப்பதாக போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்படும் செயல்” என அமைச்சர் ராஜித்த சேனராட்ன தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர்,

”இது விஞ்ஞானபூர்வமான தேயன்றி அரசியல் ரீதியானதல்ல. இது போஷாக்குடன் தொடர்புபட்ட விடயம். அதனைவிடுத்து பால் மா நாட்டுக்கு தேவையா? அல்லது இல்லையா? என்பதல்ல. பால் மா கம்பனிகள் மீதான அக்கறையால் பால்மாவை, அமெரிக்கா சிபாரிசு செய்தபோதும், பிறந்த சிசுக்களுக்கு தாய்ப்பாலே சிறந்தது என்பதனை அங்கீகரிப்பதற்காக அமெரிக்காவுக்கு நான், பாரிய அழுத்தத்தை மேற்கொண்டேன்.” என்றார்.

இதேவேளை இந்த செய்தியாளர் மாநாட்டில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியக் கலாநிதி அனில் ஜாசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்