பயங்கரவாதச் சட்டத்திற்கு எதிராக் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி யாழ்,முல்லைத்தீவு வவுனியா  மாவட்ட மக்கள் இணைந்து இன்று கிளிநாச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றை   எதிர்த்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

 குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. நாட்டில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையும்  கண்டித்து குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது,
கிளிநொச்சி மக்களின்   ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநாச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் ஏ9 வீதியால் டிப்போ சந்திவரை சென்று அங்கு கவன ஈர்ப்பும் முன்னெடுக்கப்பட்டது,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்