துறை முகங்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதியமைச்சர் செயலாளருக்கு பணிப்புரை

ஹஸ்பர் ஏ ஹலீம்)

துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களை துறை முகங்கள் கப்பல் துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி பராக்ரம திசாநாயக்க  அவர்கள் சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது இன்று (20) புதன் கிழமை கொழும்பில் உள்ள  துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சின் அலுவலகத்தில் இடம் பெற்றது.

ஒலுவில் துறை முகத்தில் காணப்படும் மீனவர்களுடைய பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களுக்கான தீர்வுகளை விரைவுபடுத்துமாறும் திருகோணமலை துறை முக அபிவிருத்திக்கான சகல நடவடிக்கைகள் தொடர்பாக மீளாய்வு செய்வதற்காக இவ் வாரத்திற்குள் விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் செயலாளருக்கு பணிப்புரை வழங்கினார்.

துறை முகங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விடயங்கள் தொடர்பிலும் செயலாளருடன் பிரதியமைச்சர் கலந்தாலோசனை செய்தார்.

குறித்த சந்திப்பில் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களார எஸ்.எம்.றிபாய், முஸ்தபா போன்றோர்களும் உடனிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்