உள்நாட்டலுவல்கள் அமைச்சர் யாழ் மாநகரசபைக்கு விஜயம்

உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்த்தன அவர்கள் கடந்த சனிக்கிழமை (16) யாழ் மாநகரசபைக்கு விஜயம் செய்திருந்தார். இவ் விஜயத்தின் போது யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் கௌரவ அமைச்சர் அவர்களை வரவேற்றுக் கொண்டதுடன், யாழ் மாநகரசபையின் தற்போதைய செயற்பாடுகள், மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் மற்றும் 10 வருடங்களுக்கு மேலாக பணிபுரிநிது வரும் பணியாளர்களின் நிரந்தர நியமனம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கௌரவ அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிப்பதாக கருத்து வெளியிட்ட அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்கள் ஊழியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இச் சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர், பிரதம பொறியியலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்