அகிம்சையை கைவிடுங்கள்.. அதிரடி தாக்குதல் நடத்துங்கள்: இந்தியாவுக்கு இஸ்ரேல் அட்வைஸ்!

பயங்கரவாதத்தினால் இந்தியா, இஸ்ரேல் மட்டுமல்ல பல்வேறு உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு நாங்கள் (இஸ்ரேல்) அதிரடி தாக்குதல்களை நடத்திவருகிறோம். அந்த வகையில், தீவிரவாதம் – பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு எந்த வித நிபந்தனையுமின்றி முழுமையாக உதவ தயராக உள்ளோம் என அறிவித்துள்ளது இஸ்ரேல்.

ஜம்மு காஷ்மீர், புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் தேதி இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் – இ- முகமது என்ற அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 வீரர்கள் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் – இ- முகமது என்ற அமைப்பை சார்ந்த 3 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், ஜெய்ஷ் – இ- முகமது என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் பாகிஸ்தானிலேயே ஒளிந்திருப்பதாகவும், புல்வாமா தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் பங்கு உள்ளது எனவும் வெளிப்படையாக குற்றம் சாட்டிவருகிறது இந்தியா.

புல்வாமா தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா, இஸ்ரேல் மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. பயங்கரவாதிகளை ஒடுக்க இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தவகையில் இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் நடவடிக்கையை இந்தியாவும் பின்பற்ற வேண்டுமென” தெரிவித்துள்ளார் இந்தியாவுக்கான புதிய இஸ்ரேல் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரோன் மல்கா.

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “காஷ்மீரில் இந்திய துணை ராணுவ படை வீரர்கள் மீதான தாக்குதல் கண்டத்துக்குரியது. வீரர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியா எங்கள் நெருங்கிய நட்பு நாடு. எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு நிபந்தனை இன்றி உதவ இஸ்ரேல் தயாராக உள்ளது. எங்கள் தொழில்நுட்பத்தையும் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்