காரைதீவு பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற கிராம சக்தி வார மூன்றாம் நாள் நிகழ்வு

கிராம சக்தி தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக கிராம சக்தி வாரம் 2019.02.18 தொடாக்கம் 2019.02.24 வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

காரைதீவு பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் இன்று (20) மூன்றாம் நாள் நிகழ்வாக சுற்றாடல், வீட்டு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்பு எனும் தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன் போது சுற்றாடல் பாதுகாப்பு, கழிவு முகாமைத்துவம், சேதனப்பசளை பயன்பாடு பற்றிய அறிவினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டதுடன் மற்றும் வீட்டுதோட்டத்தில் தனக்குத் தேவையான பயிர்களை நடுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தல் போன்ற நிகழ்வுகள் மாளிகைக்காடு மேற்கு கமு/சபினா வித்தியாலயத்தில் அதிபர் ஜனாப்.MIM. அஸ்மி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு. வேதநாயகம் ஜெகதீசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அதிதியாக பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.எஸ்.விவேகானந்த ராஜா அவர்களும், வளவாளர்களாக கமநல அபிவிருத்தித் திணைக்கள போதனாசிரியர்கள் கலந்துகொண்டு செய்முறை விளக்கம் அளித்தார்கள் அத்துடன் இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், ஆசிரியர்களும் பங்குபற்றினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்