கனடாவில் நள்ளிரவில் நடந்த கொடூரம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் பலி!

கனடாவில் மாண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

மாண்ட்ரியல் பகுதியில் உள்ள வீடொன்றில் நள்ளிரவில் திடீரெனத் தீப்பிடித்துள்ளது.

இதன்போது, அவ்வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் தீயில் சிக்கி கூச்சலிட்டுள்ளனர். அருகில் வசிப்போர் தீயணைப்பு வீரர்களுக்கு அறிவித்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதும், குறித்த வீட்டில் தங்கியிருந்த 7 குழந்தைகள் தீயில் சிக்கி பலியாகியுள்ளனர்.

குழந்தைகளின் பெற்றோர் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சிரியாவைச் சேர்ந்த அகதிகள் என தகவல் வௌியாகியுள்ளது.

உயிரிழந்த சிறுவர்கள் 3 மாதம் முதல் 14 வயது வரையானவர்கள் என கூறப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்