ரோஸ் டெய்லர் சாதனை

ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் நியூஸிலாந்து அணி சார்பில் அதிக ஓட்டங்களைப் பெற்ற துப்பாட்ட வீரர்களின் பட்டியலில் ரோஸ் டெய்லர் முதலிடம் பெற்றுள்ளார்.

நியூஸிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஸ்ரீபன் ப்ளமிங் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் 8,007 ஓட்டங்களைப் பெற்றிருந்தமையே, ஒருநாள் போட்டிகளில் நியூஸிலாந்து அணி வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டமாக இருந்தது.

இவர், 279 போட்டிகளில் இந்த ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற 3ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில், ரோஸ் டெய்லர் 82 பந்துகளில் 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதனூடாக 218 ஒருநாள் போட்டிகளில் 8,026 ஓட்டங்களைப் பெற்று ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் ரோஸ் டெய்லர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்