ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து தொடர்ந்து முதலிடம்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியலில் 126 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இன்று வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் 16 அணிகள் இடம்பிடித்துள்ளன.

இதில் 122 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாம் இடத்திலும், 112 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி மூன்றாம் இடத்திலும், 111 புள்ளிகளுடன் தென்னாபிரிக்க அணி நான்காம் இடத்திலும் உள்ளன.

பாகிஸ்தான் அணி 102 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்திலும், அவுஸ்திரேலிய அணி 100 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்திலும், பங்களாதேஷ் அணி 90 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திலும், இலங்கை அணி 78 புள்ளிகளுடன் 8 ஆம் இடத்திலும் உள்ளன.

மேற்கிந்தியத் தீவுகள் அணி 72 புள்ளிகளுடன் 9ஆம் இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி 67 புள்ளிகளுடன் 10 ஆம் இடத்திலும், சிம்பாப்வே அணி 52 புள்ளிகளுடன் 11 ஆம் இடத்திலும், அயர்லாந்து அணி 39 புள்ளிகளுடன் 12 ஆம் இடத்திலும் உள்ளன.

இதேநேரம், 33 புள்ளிகளுடன் ஸ்கொட்லாந்து அணி 13 ஆம் இடத்திலும், ஐக்கிய அரபு இராச்சிய அணி 15 புள்ளிகளுடன் 14 ஆம் இடத்திலும், நேபாள அணி 15 புள்ளிகளுடன் 15ஆம் இடத்திலும், நெதர்லாந்து அணி 8 புள்ளிகளுடன் 16ஆம் இடத்திலும் உள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்