இந்தியாவுக்கான அனைத்து விமானச் சேவைகளும் வழமைக்கு திரும்பியது!

இந்தியாவுக்கான அனைத்து விமானச் சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாக எயார் கனடா அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் பதற்ற நிலை நிலவியதால், பாகிஸ்தான் தனது வான் பரப்பில் விமான சேவைகளை மேற்கொள்வதற்கு தடை விதித்திருந்தது.

இதனால், ரொறன்ரோவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற விமானம், வன்கூவரில் இருந்து டெல்லிக்கு செல்லவிருந்த விமானம், என இரண்டு விமானங்களை எயார் கனடா இரத்து செய்திருந்தது.

இந்நிலையில், தற்போது இருநாடுகளுக்கிடையிலான பதற்ற நிலைமை சுமூகநிலையை எட்டியுள்ள நிலையில், இந்தியாவுக்கான அனைத்து விமானச் சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாக எயார் கனடா அறிவித்துள்ளது.

எயார் கனடா, ரொறன்ரோவில் இருந்தும் வன்கூவரில் இருந்தும் அன்றாடம் ஒவ்வோர் விமானப் பயணத்தை டெல்லிக்கு மேற்கொள்கின்றது என்பதுடன், வாரத்திற்கு நான்கு விமானங்கள் ரொறன்ரோவில் இருந்து மும்பை நோக்கி பயணிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்