அபிநந்தன் என்ன ஜாதி என்று கூகுளில் தேடிய 10 லட்சம் பேர்..!

சமூகத்தில் யாராவது ஒருவர் பிரபலமாகிவிட்டால் உடனே அவர் நம்ம ஜாதியைச் சேர்ந்தவரா என்று கூகுளில் தேடிக் குதுகலம் அடையும் ஜாதிவெறிக் கும்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தேடலில் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்து தாயகம் திரும்பிய தமிழக வீரர் அபிநந்தன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

கூகுள் தேடலில் இன்று அதிகம் பேர் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிற முக்கிய சமாச்சாரமாக ஜாதி அமைந்துவிட்டது. அரசியலில், சினிமாவில், மற்ற துறைகளில் பிரபலமாக உள்ள ஒருவர் நம் ஜாதிக்காரரா அல்லது வேற்று ஜாதிக்காரரா என்று தெரிந்துகொள்வதில் மக்கள் அளவுக்கு அதிகமாக ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

நேற்றைய காலை நிலவரப்படி கூகுளில் அபிநந்தனின் ஜாதியை தேடியவர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சத்து அறுபதாயிரத்தை எட்டியுள்ளது. இன்னும் அதிகரித்து செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன. இதுகுறித்து பலர் முகநூல் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

எதிர்பார்த்தது போலவே, அபிநந்தன் வர்த்தமான் என்ன ஜாதி என்ற ஆராய்ச்சியில் ஒரு க்ரூப் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். இப்படி ஒரு ஜாதி வெறி பிடித்த ஜெனரேஷன் இதற்கு முன் தமிழ்நாட்டில் இருந்திருக்குமா என ஐயமாக இருக்கிறது. சமூகவலைத்தளங்கள் எங்கும் ஜாதி வெறி பிடித்த சைக்கோக்களின் பதிவுகள் நிரம்பி வழிகிறது. குறைந்தபட்சம் அபிநந்தனையாவது இந்தியாவுக்கு பொதுவாய் வைப்போம்!

என்று வேதனையோடு பகிர்ந்துள்ளார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்