வரவேற்பு வளைவு விவகாரம் ! – கிறிஸ்தவ பாதிரியாரின் கீழ்த்தனமான செயல்..!தமிழ் சி என் என் ஊடகவியாளரின் துணிச்சலான செயற்பாடு..!

இன்றயை தினம் மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்தில் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வீதிகள் மற்றும் பலவிதமான சீரமைப்பு வேலைகள் நேற்று நடைபெற்றது.

அந்த வகையில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு பல வருடங்களுக்கு முன் செய்யப்பட்டதால் துருப்பிடித்திருந்தது. அதனை மாற்றி புதிய வளைவு அமைக்கும் பணியில் சில தொண்டர்கள் நேற்றைய தினம் (03) ஈடுபட்டிருந்தார்கள்.

அப்போது அங்கு வந்த மாற்று மத மக்கள் சிலர் அவ்விடத்தில் வளைவு அமைக்க விடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் கோவிலுக்குள் உள்நுழையும் வளைவுகள் முழுவதையும் அடித்து நொறுக்கி பிடிந்து எறிந்துள்ளனர்.

இதனை கேள்வி உற்று உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த எமது தமிழ் சி என் என் பிராந்திய செய்தியாளர் ராயூகரன் மத வெறி பிடித்தவர்களை தடுத்து நிறுத்துவதில் கடுமையாக முனைப்பு காட்டியிருந்தார்.

அவ் இடத்தில் மத வெறி பிடித்தவர்களை தடுத்து நிறுத்த முற்பட்ட போது எமது செய்தியாளர் அங்கு குறித்த கேவலமான நிகழ்வை தலைமை தாங்கி நடத்திய கிறித்தவ பாதிரியாரால் எச்சரிக்கப்பட்டார் .

சமூக ஒற்றுமைகளை பேண வேண்டிய பாதிரியார் இவ்வாறான கீழ்த்தனமான செயலை செத்தமை ஒட்டுமொத்த நாட்டு கிறிஸ்தவ மத குருமார்களையும் தலைகுனியவைத்துள்ளது.

மேலும் குறித்த ஊடகவியலாளரின் தன்னிச்சையான வீரமிக்க செயற்பாட்டை சமூக வலைத்தளங்கள் ஊடக நெட்டிசன்கள் பாராட்டிவருகின்றனர்.

மேலும் குறித்த மத வெறிபிடித்த கும்பலின் செயற்பாட்டை கிறித்தவ மக்கள் மற்றும் கிறிஸ்தவ அரசியல் பிரமுகர்களும் எதிர்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்