சீனாவின் நிலைப்பாடு குறித்து கனேடிய பிரதமர் அதிருப்தி

சீனாவில் கைது செய்யப்பட்டுள்ள கனேடியர்கள் தொடர்பான சீனாவின் நிலைப்பாடு வருத்தமளிப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

சீனா கைது செய்துள்ள கனேடிய பிரஜைகள் இருவரும் உளவு பார்த்துள்ளதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், சீனாவின் நிலைப்பாடு குறித்து அதிருப்தி தொிவித்த கனேடிய பிரதமர், கனேடியர்களின் பாதுகாப்பிற்கே தமது அரசாங்கம் முன்னுரிமை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவியின் முக்கிய நிதி அதிகாரி அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படும் சாத்தியக்கூறு அதிகரித்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அதிகாரி மைக்கேல் கோவ்ரிக், வர்த்தகர் மைக்கேல் ஸ்பாவர் ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் மாதம் சீனாவால் கைது செய்யப்பட்டனர்.

ஹூவாவி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் முக்கிய அதிகாரி கனடாவில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த கனடியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்