கடாபியின் தாயின் மறைவுக்கு அஞ்சலித்தார் சிறிதரன் எம்.பி.!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதியும், தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்தவரும் குறிபார்த்து சுடுவதில் விற்பன்னருமான பிரிகேடியர் ஆதவன் (Aimer கடாபி) அவர்களின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அம்மையார் மறைவடைந்து அவரது இறுதிக் கிரியைகள் நேற்று நடைபெற்றன.

விடுதலைப் போராட்டத்திற்கென தனது பிள்ளையை உகந்தளித்து பெருமாவீரனாக்கிய இந்த உன்னத அன்னைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று தனது அஞ்சலிகளைச் செலுத்தினார்.

அம்மையாரின் மறைவு குறித்து அஞ்சலி தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் –

வீரம் செறிந்த போராட்டத்துக்கு தனதுபிள்ளை பிறக்கின்றபோதே மாவீரன் என்ற கனவோடு ஈன்ற அன்னை ஆறுமுகம் மகேஸ்வரி அம்மாவின் மறைவு தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பாகும். அம்மையாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகின்றோம். இவரது ஆத்மா நித்திய சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக.


தாய்நாட்டின் விடிவுக்காக தங்கள் இன்னுயிரை உவந்தளித்த மாவீரர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அவர்களின் உறவுகள் அனைவரும் மரியாதைக்குரியவர்களே! – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்