பருத்தித்துறையில் பேரெழுச்சியுடன் சிறப்புற பெண்கள்தின நிகழ்வுகள்!

மதுபோதைக்கு எதிரான இயக்கம் கிராமக்கோட்டுச் சந்தி, பருத்தித்துறையில் உள்ள எஸ்.எஸ். மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்ட நிகழ்வுகளை ஆரம்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வின் இறுதியில் சமூகத்துக்குத் தலைமை வகிக்கும் பெண்கள் கௌரவிக்கப்படவும் உள்ளனர்.

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் மதுபோதைக்கு எதிரான இயக்கத்தின் தலைவருமான ச.சுகிர்தனின் தலைமையில் இன்று 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்த நிகழ்வுக்கு  பிரதமவிருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக, வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் திருமதி நளாஜினி இன்பராஜூம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி திருமதி நளாஜினி ஜெகதீசனும், காரைநகர் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கமும் பருத்தித்துறை நகரசபை உப தவிசாளர் திருமதி மதினி நெல்சனும், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ஜெயலக்ஸ்மி உதயகுமாரும் சட்டத்தரணியும் லண்டன் பெண்கள் சமூக செயற்பாட்டாளருமாகிய திருமதி சுமித்திரா இளஞ்செழியன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கின்றனர்.

பெருந்திரளான பெண்கள் நிகழ்வில் கலந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்