இந்து சமய அறநெறிக் கல்வி புதிய பாடத்திட்டத்திற்கமைவாக வெளியிடப்பட்ட நீதி நூற் தொகுப்புகள் அறிமுகவிழா…

காந்தன்.

இந்து சமய அறநெறிக் கல்வி புதிய பாடத்திட்டத்திற்கமைவாக வெளியிடப்பட்ட நீதி நூற் தொகுப்புகள் அறிமுகவிழா 10.03.2019 இன்று காலை 9.00 மணியளவில் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் மட்டக்களப்பில் சிவயோகச் செல்வன்,கலாபூஷணம் சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் ஆத்மீக முன்னிலையில் ஸ்ரீ மத் சுவாமி பிரபு பிறேமானந்த ஜீ மஹராஜ் அவர்களும், பிரதம அதிதியாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் அவர்களும், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. திரு. யோகேஸ்வரன் அவர்களும், இந்து சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் ,உதவிப் பணிப்பாளர்கள், கிழக்கு பல்கலைக்கழக இந்து நாகரிக விரிவுரையாளர் திரு.என்.வாமன்,  கிழக்குமாகாண கலாசார உத்தியோகத்தர்கள் ,அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.      அறநெறிப் பாடசாலை மாணவர்களினால் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.

அத்துடன் அதிதிகளுக்கு இந்து சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ. உமாமகேஸ்வரன் அவர்களினால் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.

மேலும் அதிதிகளினால் கிழக்குமாகாண அறநெறிப் பாடசாலைகளுக்கு நீதி நூற் தொகுப்புகள்
கிழக்கு மாகாணத்தில் உள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குமான நீதி நூற் தொகுப்புகள் ஆசிரியர்களிடம்  வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்