மாவை எம்.பியின் நிதி ஒதுக்கீட்டில் 12 பாடசாலைக்கு ‘சிமாட்’ வகுப்பறை!

வலிகாமம் வடக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட 12 பாடசாலைகளுக்கு ‘சிமாட்’ வகுப்பறைகளை அமைப்பதற்காக 50 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

அந்த வகையில் வலிகாமம் வடக்கில், வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளான –

01. ஒட்டகப்புலம் நோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
02. வலித்தூண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
03. குட்டியப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
04. தையிட்டி கணேசா வித்தியாசாலை
05. இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயம்
06. அளவெட்டி அருனோதயக் கல்லூரி
07.காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரி
08. வறுத்தலைவிளான் அமெரிக்கமிசன் வித்தியாலயம்
09. வீமன்காமம் மகாவித்தியாலயம்
10. மல்லாகம் குழமங்கால் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
11. கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயம்
12. தெல்லிப்பழை தந்தை செல்வா தொடக்கநிலைப் பள்ளி ஆகிய வித்தியாலயங்களுக்கே ‘சிமாட்’ வகுப்பறைக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஒவ்வொரு வட்டாரங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற உறுப்பினர்களை அழைத்த அந்தத் தொகுதியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா, பிரதேசசபைகளின் வட்டார உறுப்பினர்களிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்று, தவிசாளர் சோ.சுகிர்தனின் சிபாரிசுக்கமைய இந்தப் பாடசாலைகளைத் தெரிவுசெய்து நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்