கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாவிட்டால் கிழக்கில் மக்கள் போராட்டம் !

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை உடனடியாக பிரதேச செயலகமாக தரமுயர்த்தா விட்டால் கிழக்கில் பெரும் மக்கள் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளார் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி, ச.வியாழேந்திரன்.

நாடாளுமன்றத்தில் நேற்று (12) இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான 6ம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை 2016, 2017, 2018ம் ஆண்டு வரவு செலவுத் திட்டங்களில் இந்த அரசினால் வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அமைச்சர்களினால் கிழக்கில் அடிக்கல்கள் மட்டமே நாட்டப்படுகிறது. இதைத் தவிர வேறு ஒன்றுமே நடப்பதில்லை. அமைச்சர்கள் அடிக்கல் நாட்டுவதை விட தென்னங்கன்றுகள் நாட்டியிருந்தால் இளநீராவது குடித்திருக்கலாம்.

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதிலும் இந்த அரசு ஏமாற்றியுள்ளது. உடனடியாக, கல்முனை பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்டாவிட்டால் கிழக்கில் பெரும் மக்கள் போராட்டங்களை ஆரம்பிப்போம் என எச்சரித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்