ரூபாவின் பெறுமதியில் மாற்றம்! மங்களவின் அதிரடி

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு ரூபாவின் பெறுமதி இரண்டு சதம் ஐந்து வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் பதிலுரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரச ஊழியர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் மீண்டும் வழங்கப்படவிருக்கிறது. மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை அமுலுக்கு வரும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் 108 சதவீதத்தால் அதிகரித்திருக்கிறது என்றும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்