குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களையே பெற்றுள்ளது.

போர்ட் எலிசபத் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 39.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் இசுரு உதான 78 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா அணி ஏற்கனவே மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்