இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இன்று திறப்பு

இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இன்று (14ஆம் திகதி) திறக்கப்படவுள்ளது இந்த நிகழ்வுகள்  நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரளவின் தலைமையில் நடைபெறவுள்ளன பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்கு விசாரணை முன்னெடுப்பதற்காக இந்நீதிமன்றம் திறக்கப்படுகின்றது  கொழும்பு – புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியிலேயே இந்த இரண்டாவது மேல் நீதிமன்றமும் அமைந்துள்ளது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் உள்ளிட்ட குற்றங்களை குறித்து விசாரணை செய்வதற்கு மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட மூன்று விசேட நீதிமன்றங்களை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது இதன்படி முதலாவது விசேட மேல் நீதிமன்றம் கடந்த வருடம் ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது

இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இன்று திறக்கப்படவுள்ளதுடன் இதற்கான நீதிபதிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்