காத்தான்குடியில் ஆசிரியர் தாக்கியதில் 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி: ஆசிரியருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 43 வயதான ஆசிரியர் ஒருவர் தாக்கியதால் 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கல்வி செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுக்கவில்லை என தெரிவித்து மாணவர்களை ஆசிரியர் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர்ப்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது  காத்தான்குடி பகுதியிலுள்ள அரச பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்விகற்கும் 17 மாணவர்கள் மீதே குறித்த ஆசிரியர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்  இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்