‘இலங்கைத் தமிழ் சினிமா’ – சிங்கள மொழி மூல நூல் வெளியீடு

செல்வி அனுஷா சிவலிங்கம் எழுதிய ‘இலங்கைத் தமிழ் சினிமா’ என்கின்ற சிங்கள மொழி மூலமான நூல் நேற்று (புதன்கிழமை) மாலை இலங்கை மகாவலி கேந்திர மத்திய நிலையத்தில் வெளியிடப்பட்டது.

எழுத்தாளரும், சினிமா விமர்சகருமான தம்பிஐயா தேவதாஸ் இந்நிகழ்வில் பிரதம விருந்திரான கலந்து கொண்டார்.

‘கோமாளி கிங்ஸ்’ திரைப்பட இயக்குனர் கிங் ரட்ணம், ‘இங்கிருந்து’ திரைப்பட இயக்குனர் சுமதி சிவமோகன், சினிமா செயற்பாட்டாளர் அனோமா ராஜகருணா உள்ளிட்ட பல சிங்கள மற்றும் தமிழ் சினிமா விரும்பிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

குறித்த புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக எழுத்தாளர் அனுஷா சிவலிங்கம் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்