பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் பலி: பிரேஸிலில் சம்பவம்

தென் அமெரிக்க நாடான பிரேஸிலின் தென் கிழக்கே, பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

சாவோ போலோவின் (Sao Paulo) சுஸானோ ( Suzano) நகரிலுள்ள அரச பாடசாலை ஒன்றில், மாணவர்கள் இடைவேளையில் இருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது துப்பாக்கிச் சூட்டை நடத்திய 17 மற்றும் 25 வயதான இருவர், சம்பவத்தின் பின்னர் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்

இதேநேரம், ரிவோல்வர் உட்பட வெடிபொருட்கள் சிலவும் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்  பிரேஸிலில் துப்பாக்கிச் சூடு பொதுவான விடயமாகக் காணப்படுகின்ற நிலையில் பழைய மாணவர்கள் எதற்காக இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பது புலப்படாத ஒன்றாக இருக்கின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்