மொறட்டுவ துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு

மொறட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்