நைஜீரியாவில் பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் லகூஸ் (Lagos) நகரிலுள்ள பாடசாலை ஒன்றின் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

குறித்த 4 மாடி கட்டடத்தின் மேல் மாடியில் அமைந்திருக்கும் பாடசாலையில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் இருந்ததாக, மீட்புப் படையினர் பிபிசிக்குத் தெரிவித்துள்ளனர் மேலும் இதன்போது கிட்டத்தட்ட 40 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்